பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 423 ஆயிரம் ஒட்டுக்களைப் பெற்று மூன்றாவது இடத்திலே வந்தது இந்தியா முழுவதையும் ஆண்டு கொண்டிருந்த பிரதமர் இந்திரா காங்கிரஸ் கட்சி, அவமான கரமாக வெறும் 11,423 ஒட்டுக்களை மட்டுமே பெற்று நான்காவது இடத்திற்கு மக்களால் தள்ளப்பட்டது. இந்த இடைத் தேர்தலிலே உள்ள சிறப்பு என்னவென்றால், தேர்தலில் பெற்றிபெற்றவர் மக்களிடையே புகழ் பெற்ற, செல்வாக்குள்ள ஒரு சினிமா நடிகர்கட்சி! அதனால், அவர் வெற்றி பெற்றார். இது ஒன்றும், அவ்வளவு சிறப்புக்குரிய அற்புதமான சாதனை என்று கூறமுடியாது; தமிழ் நாட்டில் புரட்சி நடிகரின் மக்கள் செல்வாக்கை இன்றும் அல்ல- என்றும் புரிந்தவர்களுக்கு அப்போதைய இந்த உண்மை புரியும்! அடுத்ததாக, தமிழ் நாட்டை ஆட்சி செய்கின்ற கலைஞர் கட்சியின் வேட்பாளர். அவருக்குப் பணபலம் மட்டுமன்று; மக்கள் தலைவர் என்ற செல் வாக்கும் உண்டு; அத்துடன் ஆட்சியின் அதிகார பலம் எந்த வடிவத்திலும் அவருக்கு உண்டு; பாமரனும் இந்த உண்மையை உணர்ந்து ஒப்புவான். அது மட்டுமன்று; தேர்தல் பணியாற்றுவதிலே கலைஞரும் புலிபோன்ற காமராஜர்தான் என்ற பெயரெடுத்தவர் அவர், நான்கு பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலிலே மூன்றாவது இடத்தைத்தான் பெறமுடிந்தது! அந்த நேரத்தில், அந்தத் தொகுதியில் தி.மு.க. செல்வாக்கு அவ்வளவு ஒட்டுக்களைத்தான் பெறமுடிந்தது! பெருந்தலைவர்காமராஜர் பலத்தை வீழ்த்தி அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை! மத்திய ஆட்சியைக் கையிலேந்திக் கொண்டிருந்த இந்திரா காந்தி இந்திய நாட்டின் புகழ் பெற்ற பிரதமர்; அதிகாரங்கள்.அவர் வாய்திறந்தால் அஞ்சலிகள் செய்யும் பாரம்பரிய செல்வாக்கும், சொல்வாக்கும் பெற்றவர்; அப்படிப்பட்ட அவர் எத்தனையாவது இடத்தைப் பெற்றார்? கடைசி இடத்தை! அதாவது நான்காவது இடத்தை அவர் பெற்ற வாக்கு எவ்வளவு? 11,423 ஒட்டுக்கள் மட்டும்தான்! இது எப்படி? அப்படியானால், இரண்டாவது இடத்திலே இருப்பவர் யார்? இந்தியாவில் செல்வாக்கெனும் பொதிகையாகப் பரந்து விரிந்து உயர்ந்தவர்; காலவசத்தால், முதலமைச்சர் பதவியைக் கட்சி