பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் . 89 என்று கூறப்பெறும் ஏனையவற்றோடு இது பெரிதும் மாறு பட்டது. எல்லா வகையாலும் காப்பியம் என்று கூறத்தக்க கம்பராமாயணம் என்ன காரணத்தாலோ ஜம்பெருங் காப்பியங் களில் ஒன்றாகச் சேர்த்து வழங்கப்பெறவில்லை. என்றாலும். காப்பிய இலக்கணம் ஒரளவே அமைந்த மணிமேகலை பெருங் காப்பியங்களுள் ஒன்றாக வழங்கப்பெறுகிறது. இம் முறை கொண்டு பார்த்தால் காப்பியங்களின் இலக்கணம் நாளடைவில் இந் நாட்டில் பெரிதும் மாறிவரும் தன்மையை அடைந்தது என்ற தோன்றும் ஒவ்வொரு நூலையும் எடுத்துக் கொண்டு, அது தோன்றிய காலத்துள்ள இலக்கண வரம்பை அடிப்படையாகக் கொண்டு அந் நூலை அளவிட வேண்டும். பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சிந்தாமணியைக் காப்பியம் என்பர். அதனை ஓர் அளவு கோலாகக் கொண்டு அளந்தால் 12ஆம்நூற்றாண்டில் தோன்றிய திருத்தொண்டர் புராணமும் காப்பியந்தான் என்பதில் ஐயம் இல்லை. ஏன் எனில், சிந்தாமணியைப் பெரிதும் அடியொற்றித் தோன்றியதேயாகும் பெரிய் புராணம், . இனி, இத் தனிப் பெரும் காப்பியத்துள் அமைந்த தனிச் சிறப்பைக் காண்போம். இந் நூல் காப்பியம் என்றால் இதன் தலைவர் சுந்தரமூர்த்திகளே ஆவர் அன்றோ? காப்பியத் தலைவர் நாட்டையும் அவரது ஊரையுந்தானே ஆசிரியர் வருணிக்க வேண்டும்? சுந்தரமூர்த்திகள் பிறந்தது திருமுனைப்பாடி நாடு. அந்நாட்டில் திருநாவலூர் என்ற ஊரில் அவர் தோன்றினார். இந் நாட்டையும் ஊரையும் பற் றிச் சேக்கிழார் கூறுவன இரண்டே பாடல்கள் தாம் இதை விட்டுச் சோழ நாடு பேசப் பெறுகிறது. நாட்டுச் சிறப்பு என்று பெயர் தாங்கிய நாட்டுப் படலத்தில், திருவாரூர் பேசப்பெறுகிறது, “நகரச் சிறப்பு என்ற நகரப் படலத்தில். இதன் காரணம் என்ன? சுந்தர மூர்த்திகள் தாம் விரும்பிய பரவையாரை மணந்து, வண்றொண்டராக வாழ்ந்தது.திருவாரூரில். ஆதலால், ஆசிரியர் அவ்வூரை