பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 107 இவன் ஒருபுறம் இருக்க, இவன் தந்தையாகிய மகேந் திரவர்மனைப் பற்றிச் சேக்கிழார் என்ன கூறுகிறார்? இம் மன்னவன் முதலில் வேற்றுச் சமயத்தவனாக இருந்தது உண்மையே. இதனைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். ஆனால், கல்லையே தெப்பமாகக் கொண்டு அப்பர் பெருமான் திருப் பாதிரிப்புலியூரில், கரையேறினார் என்று அறிந்தவுடன், மன்னனாகிய மகேந்திரவர்மன் முற்றும் மனமாற்றம் பெறு கிறான். அம்மட்டோடு நிற்கவில்லை அவ்வேந்தன். அது வரையில் தான் மேற்கொண்ட சமயத்தைக் கைவிட்டுச் சைவ சமயம் புகுந்தான். பல திருக்கோயில்களை எடுப்பித் தான். திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டு முதலியவற்றால் அவனுடைய மனமாற்றம் எவ்வளவு ஆழமானது என்பதும் நன்கு தெளிய முடிகிறது. அவன் மாற்றத்தைக் கூறவந்தி சேக்கிழார், - . "............மெய்யுணர்ந்த காடவனும் திருவதிகை ககளின்கண் கண்ணுதற்குப் குணயரஈச்சரம்ாடுத்தான்' - (பெ.பு.--திருநாவுக்கரசர் 146) என்று பாடுகிறார். குணபரன் என்ற சிறப்புப் பெயர் பூண்ட அம்மன்னன் அந்நாளைய வழக்கப்படி தன் பெயரா லேயே திருவதிகையில் கோயில் எடுத்தான். பரம சிவ பக்தனாக மாறிவிட்ட இம்மன்னனையாவது சேக்கிழார் பெய ரிட்டுக் குறிப்பிட்டாரா? காடவன். பல்லவன் என்று கூறுவது தவிர ஒன்றும் இல்லை. குணபரசீச்சரம் என்ற கோயில் கட்டினான் என்கிற போதாவது இப்பெயர் அவனுடைய பெயர் என்று கூறினாரா? ஏன் கூறவில்லை? இனி, அடுத்துக் காணப்பட இருப்பவர் கழற்சிங்கர் என்ற பல்லவ மன்னர். இப்பெரியார் மிகுந்த சிவபக்தர்