பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தேசீய இலக்கியம் காலம் இன்றுவரை நாம் அறிய முடியாது போயிருக்கும். ஏனெனில், இந்த நாயன்மார்களும் சிறுத்தொண்டரும் சம காலத்தவர்கள். சிறுத்தொண்டரைத் தம் பாடலில் வைத்துச் சிறப்பிக்கிறார் ஞானசம்பந்தர். இத்துணைச் சிறப்புடைய நரசிம்மவர்மப் பல்லவனைப் பெயரிட்டுக்கூடச் சேக்கிழார் குறிப்பிடாததன் கருத்த்ென்ன? ஒருவேளை அவன் சிவபக்தன் அன்று என்பதற்காக இருக்க லாம் என்று நினைக்கவும் இடமுண்டு. ஆனால், அவனைச் சிறந்த அன்பன் என்று அவரே குறிப்பிடுகிறார். பரஞ் சோதியார் பெற்ற வெற்றியை அரசன் மிகவும் பாராட்டினான் என்றும், பக்கத்தில் நின்ற அமைச்சர்கள், 'மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்தவலி உடைமையினால். எதிர் இவருக்கு இவ்வுலகில் இல்லை என எடுத்துரைத்தனர். என்று சேக்கிழாரே பாடுகிறார். இதனைக் கேட்ட நரசிம்ம வர்மன்,

தம்பெருமான் திருத்தொண்டர் எனக்கேட்ட தார்வேந்தன் உம்பர்பிரான் அடியாரை

உணராதே கெட்டொழிக்தேன் வெம்புகொடும் போர்முனையில் விட்டிருக்தேன் எனவெருவுற்று எம்பெருமான் இதுபொறுக்க வேண்டும்என இறைஞ்சினான்" (பெ.பு.-சிறுத்தொண்டர், 8) (இறைவனுடைய அடியார் என்ற உண்மை தெரியாமல் உங்களைப் போர்க்களத்துக்கு அனுப்பியது பெரிய அபசாரம். தாங்கள் என்னை மன்னிக்கவேண்டும் என்று வணங்கினான்.) என்று கூறுகிறார். ஆதலின் அடியார் பெருமையினை நன்கு உணர்ந்த பக்தன் அரசன் என்பது நன்கு விளங்கும். அப்படி இருந்தும் ஆசிரியர் ஏன் அவனுடைய பெயரைக்கூடக் கூறாமல் விட்டுவிட்டார்? -