பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சி. ஞானசம்பந்தன் 109 வென்றவன் என்றும் அறிகிறோம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவனைக் கூடச் சேக்கிழார் சாதாரணமாகவே பாடுகிறார். எனவே அரசர்களுடைய பக்திச் சிறப்பை அன்றி வேறு சிறப்பைப் பற்றிக் கவலைப் படாதவர் சேக்கிழார் என்ற முடிவிற்கு வருதல் கூடும். ஆனால், இம்முடிவை அடுத்து ஓர் ஐயமும் தோன்றத்தான் செய்கிறது. சோழமன்னர்களைப் பற்றிச் சேக்கிழார் பாடும்பொழுது உளங்கலந்து பாடுகிறார் . என்பது மட்டிலும் உறுதி. புகழ்ச் சோழர் மனுநீதிச்சோழர் என்ற இருவரைப்பற்றிப் பாடுவதே தனிச் சிறப்பாக உளது. தம்மை ஆதரித்த அநபாயன் புகழை ஒல்லும் இடம் எல்லாம் வைத்துச் சிறப்பிக்கிறார் ஆசிரியர். கவிஞன் காலத்தின் பயன் என்ற மேல் நாட்டு முதுமொழிக்கு ஏற்பச் சேக்கிழாரும் சோழர் பெருமை பாடினாரோன்ன்றும் நினைக்க இடமுண்டா கிறது. மேலும் தாய் நாட்டுப் பற்றும் ஒரு பெருங்காரணமாக இருக்கலாம். தான் ஒரு தமிழ் நாட்டான் என்பதை ஒயாது நினைவூட்டுகிற கம்பநாடனை யாரே மறக்க வல்லார்? கவிஞர் அனைவருக்கும் இது பொது இயல்பு போலும் சோழன் அவையில் கம்பன் வாழ்ந்திருப்பினும் அவர்களுடைய நட்பு முழு நட்பு அன்று என்றே ஊகிக்கவேண்டியிருக்கிறது. ஆனால், சேக்கிழாரோ சோழனிடம் முழு அன்பையும் சோணாட்டில் முழுப் பற்றையும் கொண்டிருந்தார். ஆகவே தான், சோழர்களை ஒரு காலத்து அடக்கி ஆண்ட பல்லவர் களையும் பாண்டியர்களையும் அவர் முழு அன்புடன் நேசித்துப் பாடவில்லையோ என நினைக்க வேண்டியிருக் கிறது. இனி, சேக்கிழார் பெரிதும் போற்றிய சோழ மன்னன் ஒருவனைப் பற்றிய வரலாற்றைச் சற்று விரிவாகக் காணலாம்.