பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12. அரசாட்சி அரிதோ? எளிதோ?

தமிழ் நாடாம் நங்கைக்குத் திலகம் போன்று அமைந்தது திருவாரூர். ஒர் ஊரின் சிறப்பை அவ்வூரில் எழும் ஒலியாலும், ஒசையாலும் அளத்தல் அந்நாளைய மரபு. திருவாரூரிலே வேத ஓசையும், வீணையின் ஒசையும், சோதி வானவர் தோத்திர ஓசையும், மாதர் ஆடல் மணி முழவு ஓசையும், கீத ஓசையும் எப்பொழுதும் நிறைந்து இருந்தனவாம். இங்குக் கூறிய ஒசைகளெல்லாம் மக்களுடைய மன மகிழ்ச்சியை அறிவிக்கின்றனவேயன்றி, அவர்களுடைய குறிக்கோளை வெளியிடவில்லை. சாதாரண வரலாற்றைச் சொல்ல வருகிற கவிஞர்கள் இதனுடன் நிறுத்திவிடுவர். ஆனால், வரலாற்றைக் காப்பியமாகப் பாடி அதனாலே நாட்டை நல்வழிப்படுத்த வேண்டும் என்று விரும்பிய சேக்கிழார் இதனுடன் நிறுத்தவில்லை. திருவாரூரிலே மேலே கண்ட ஓசைகள் மட்டும் நிறைந்திருந்தால் தமிழ் நாட்டின் ஏனைய நகரங்களைப் போலத்தான் அதுவும் இருந்திருக்கும். தமிழ்நாட்டின் தவப்பயனாய்த் தோன்றிய நம்பியாரூரர் ஆகிய சுந்தரமூர்த்திகள் அங்கே வந்து தங்கவும், பரவையாரை மணக்கவும், திருத்தொண்டத்தொகை பாடவும் அவ்வூருக்கு ஒரு தனிச் சிறப்பு வேண்டும் அல்லவா? பெரியவர்கள் ஓர் ஊரில் தோன்ற வேண்டுமானால். அவ்வூரும் அதற்கேற்ற நிலைக்களமாய் அமையவேண்டும், சுந்தரமூர்த்திகள், வந்து தங்குவதற்குரிய சிறப்பைப் பெற்றது திருவாரூர் என்பதைச் சேக்கிழார் இதோ காட்டுகிறார். அவள்ளலார் திருவாரூர் மருங்கெலாம், தெள்ளும் ஓசைத் .திருப்பதிகங்கள் பைங்கிள்ளை பாடுவ; கேட்பன பூவைகள்: என்ற அடியால் இவ்வுண்மை விளக்கப்படுகிறது. தேவாரங் களைக் கிளிகள் பாட மைனாப் பறவைகள் கேட்கின்றனவாம். கிளிகள் தேவாரம் பாடவேண்டுமானால் அவ்வூரிலுள்ள மக்கள் ஓயாமல் தேவார பாராயணம் செய்திருக்க வேண்டு