பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தேசீய இலக்கியம் இத்தகைய செல்வம் படைத்த மக்கள் வாழும் நாடு உண்மையிலேயே பெரியார்கள் தன்னிடம் தோன்றக் கூடிய தகுதியுடையது என்பதில் ஐயமென்ன? அரிய சைவ சமயம் மீட்டும் தழைத்தோங்க இறைவன் அருளால் ஒரு பெரியார் தோன்றப்போகிறார் என்றால் அவர் தோன்றக் கூடிய நிலைக்களம் அங்கு இருக்க வேண்டாவா? உண்டு என்பதையே இப்பாடல் கூறுகிறது. நம்பியாரூரர் அந்தணர் குலத்திலேயே பிறந்து, அரசர் வீட்டில் வள்ர்ந்து, பரவையார் என்ற பதியிலார் குலத்தில் பிறந்தவரை மணந்து சேரமான் பெருமாள் என்னும் சேர வேந்தரோடு நட்புக் கொண்டு, திருவாரூரில் அரசரைப்போல் வாழ்ந்தவர். எனவே, அத்தகைய பெரியவர் பிறக்கப்போகும் நாட்டை வருணிக்க வந்த சேக்கிழார் அந்நாடு நல்ல செல்வம் மலிந்த நாடு என்றும், பண்புடையாளர் பயிலும் நாடு என்றும் கூறுகிறார் அப்பெருநாட்டுள்ளும் நம்பியாரூரர் பிறக்கத் தவம் செய்த பதி திருநாவலூாாகும். - ஓர் ஊர் தவஞ்செய்தது என்றால் கருத்தென்ன? கல்லும் மண்ணும் தவஞ் செய்தன என்றா பொருள் செய்வது? ஊர் நல்லது என்றோ தீயது என்றோ கூறும்பொழுது என்ன கருத்தைப் பெற வைக்கிறோம்? அவ்வூரில் வாழும் மக்களைக் குறித்துதானே மேற்கண்டவாறு பேச்சு எழுகிறது? புற நானூற்றில் ஒளவை பாடிய பாடல் ஒன்று உள்ளது. 'காடா கொன்றோ, காடா கொன்றோ, அவலா கொன்றோ, மிசையா கொன்றோ, எவ்வழி கல்லவர் ஆடவர்; - அவ்வழி கல்ல்ை வாழிய கிலனே!" - . . . (புறம், 187) என்ற பாடலில் ஏ நிலமே! நீ நாடாக இருப்பினும் பள்ளமாக இருப்பினும் மேடாக இருப்பினும் கவலை இல்லை. எங்கே நல்லவர்கள் இருக்கிறார்களோ அங்கே நீயும் நல்லை என்று