பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 123 நிறைந்த செல்வம் பல இடங்களில் இருப்பதுண்டு. அதனால் நன்மையே விளையும் என்று கூறுவதற்கில்லை. இராவண லுடைய நாடு பெற்றிருந்த செல்வத்திற்கு உவமையே கூற முடியாது. இராவணன் பகைவனாகிய அநுமான் இலங்கை யைப் பார்த்து வியந்தவனாக நரகம் ஒக்குமால் அந்நல்நெடும் துறக்கம் இந்நகர்க்கு (ஊர் தேடு-14) என்று கூறுகிறான். இலங்கையோடு ஒப்பிடும்பொழுது மோட்ச உலகமானது நரகம் என்று கூறும்படி ஆகிவிடுமாம். அத்தகைய பெருஞ் செல்வம் படைத்திருந்தும் பயன் யாது விளைந்தது? அந்நகரமும் அதைச் சேர்ந்த நாடும் தமக்கும் தம்மை ஆள்பவருக்கும் அழிவையே தேடித்தந்தன. எனவே, செல்வம் என்பது நன்மையே விளைக்கும் என்று கூறுவதற் கில்லை. இது கருதியே சேக்கிழார் திருமுனைப்பாடி நாட்டின் செல்வம் பெருகிய நலத்தால் மிக்கது என்றும் கூறுகிறார். இன்னும் பெருகிய நலம் என்றதால், நாட்டு நன்மை செல்வத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஏறுகிறது என்ற கருத்தை யும் பெற வைத்தார். சில பொருள்கள் (செல்வமும் இவற்றுள் ஒன்று) மிகுதிப்படும்பொழுது ஓரளவு வரை நன்மை செய்து, அவ்வளவின் மீறி மிகுதிப்படுமாயின் தீமையே விளைவிக்கும். இவ்வாறு ஆகாமல் இருக்க வேண்டுமாயின், அச்செல்வ முடையார் தக்கவர்களாக இருத்தல் வேண்டும். செல்வத்தின் இயல்பையறிந்து அதனை அடக்கி ஆள்பவர் கையில் செல்வம் சிறப்புற்று விளங்குவதோடு பிறருக்கும் பயன்படும். எனவே , பெருகிய நலத்தைச் செய்யும் பெருஞ்செல்வம் மலிந்த நாடு: என்றமையின் அச்செல்வமுடைய மக்கள் பண்பாட்டையும் ஒருவாறு கூறிவிட்டார். - பெருகியகலத்தால் மிக்க பெருந்திரு நாடு தன்னில் அருமறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத் திருமறை பவர்கள் டுேம் திருகாவல் ஊராம் அன்றே. பெபு-தடுத்தாள். 2)