பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் f£9 தவத்தினால் மிக்க பெரியார்கள் போற்றும் நம்பியாரூரர் என்ற பெயரைச் சூட்டினாராம் தந்தையார். "தம்பிரான் அருளினாலே தவத்தினால்மிக்கார் போற்றும் கம்பிய ரூரர் என்றே காமமும் சாத்தி மிக்க' (பெ.பு.-தடுத்தாள்,8) இவ்வாறு சேக்கிழார் இப்பெயருக்குப் பெருமைகறக் காரணம் உண்டா என்று பார்த்தால் உண்மை விளங்கும். பெருமிழலைக் குறும்பர் என்ற நாயனார் வாழ்க்கையிலேயே செய்த அரிய தொண்டு யாது தெரியுமா? நம்பியாரூரர்' என்ற பெயரையே ஒரு மந்திரமாக ஏற்றுக்கொண்டு ஜபம் செய் தார். அதனால் பெரும் பயன் பெற்றார் அவரைப்பற்றிக் கூறவந்த சேக்கிழார், 'காளும் நம்பி ஆரூரர் காமம்.கவின்ற கலத்தாலே ஆளும் படியால் அணிமாதி சித்தி யான அணைந்ததற்பின்' (பெ.பு.--பெருமிழலைக் குறும்பர் 6) என்று கூறுகிறார். நம்பியாரூரர் என்ற பெயரையே மந்திரமாக ஜபித்து அப்பெரியார் அணிமா, லகிமா முதலிய அட்டமா சித்திகளும் கைவரப் பெற்றாராம். இத்தகைய அழகியதும் பயன் விளைவிப்பதுமான பெயரைப் பெற்ற நம்பியாரூரர் சிறுதேர் உருட்டி விளையாடும் பருவமெய் தினார். ஒருநாள் அந்நாடாளும் நரசிங்க முனையரையர்' என்னும் சிற்றரசர் இவரைக்கண்டு, இவர் மேல் அன்பு பூண்டார். தாய் தந்தையர் அனுமதி பெற்று நம்பியாரூரரை எடுத்துச் சென்று தம் காதற் பிள்ளையாக வளர்த்து வந்தார். இறைவனுக்குப் பூசை செய்யும் வேதியர் குலத்துப் பிறந்து அரசர் குடும்பத்தில் வளர்ந்தாலும் நம்பியாரூரர் கலைஞானம் முற்றும் கைவரப்பெற்றார். அளவில் தொல்கலைகள் ஆய்ந்து என்று சேக்கிழார் இப்பண்பைக் குறிக்கிறார். நம்பியாரூரர் திருமணப் பருவம் அடைந்தவுடன் புத்துரில் உள்ள ஒருவர் பெண்ணை மணம் பேசி முடிது, فيسده نة تتم 3)