பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 141 நம்பியாரூரருக்குத் தோன்றிய இவ் வணக்கம் அவருடைய சிறந்த கேள்வி. கல்வி ஞானத்தாற் பெறப்பட்டது என்பதைத் சேக்கிழார் தாமே குறிப்பிடுகிறார். நம்பியாரூரைக் கூறும் பொழுது நுணங்கிய கேள்வி மேலோன்' .14) என்றே கூறு கிறார். . அடியார் காதல் - 'சித்தவட மடத்தில் விடிய விடிய நடைபெற்ற நாடகத் தைக் கண்டோம். இறுதியாக நுணங்கிய கேள்வி மேலோ ராகிய நம்பியாரூரர் வணங்கிய வாயினராக, இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார்?' என்று வினவினார். இவ் வினாவிற்கு விடை கூறுமுகமாக, கங்கை சடை கரந்தபிரான் *அறிந்திலையோ? எனக் கரந்தான கிழவன், இன்னும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்று கூறிய சொற்கள் ஆரூரரு டய செவிவழிப் புகுந்து உறங்கிக்கொண்டு இருந்த அவருடைய உள்ளுணர்வைத் தட்டி எழுப்பிவிட்டன. உடனே உறக்கம்விட்டு எழுந்த ஆரூரர், இறைவனே இவ்வாறு கூறிப் போனான் என்பதை உணர்ந்து, தம்மானை அறியாத சாதியார் உளரோ, என்று தொடங்கும் அழகிய தேவாரத்தைப் பாடிக் கொண்டு திருவதிகை வீரட்டத்தில் அமர்ந்தருளும் பெருமானை வணங்கப் போனார். 'தன்னுடைய எஜமானனை அறிந்து கொள்ளாத ஏவலாளனும் இருத்தல் கூடுமோ என்ற கருத்துடன் தொடங்கும் அத் தேவாரத்தில் எவ்வளவோ கருத்தை உள்ளடக்கிக் கூறி யுள்ளார். திருவதிகையை வணங்கி, இறைவனுடைய திருகருளைப் பெற்றுக்கொண்டு, திரும ணிக் குழியை வழிபட்டு விட்டு, யாழ் ஒலி, முழவின் ஒலி, நாதவொலி, வேதஒலி, அரம்பையார்தம் கீத ஒலி முதலியன அறாத் தில்லை மருங்கு அனைந்தார். - தமிழ்நாட்டில் கோவில்கட்குப் பஞ்சமில்லை. என்றாலும் கோயில், என்று பொதுவாகக் கூறினால் அது சிதம்பரத் தையே குறிக்கும். அந்தப் பெரிய ஊரின் நடுவே அமைந் துள்ளது திருக்கோயில் அதன் நடுவே உள்ளது அம்பலம்.