பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தேசீய இலக்கியம் தேசீயப் பாடல் (National Poetry) என்று கூறலாம். நம்பியாரூரர் இந்தக் கருத்துடன்தான் திருத்தொண்டத் தொகையைப் பாடினாரோ என்றுகூட நினைக்க வேண்டி யுள்ளது. உதாரணமாக, ஒன்றைக் காண்போம். திருப்புன்கூர் என்ற ஊரில் தாம் பாடிய அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத' என்ற தேவாரத்தில் மார்க்கண்டேயருடைய வரலாற்றை அப்படியே கூறுகிறார். இவ்வளவு அழகாக அவருடைய வரலாற்றைக் கூறும் நம் பி ய | ரு ரு க்கு மார்க்கண்டரைப் பற்றித் தெரியாது என்று கூறமுடியுமா? பின்னர் ஏன் அவரைப் பற்றித் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடவில்லை? திருத்தொண்டத் தொகையில் கூறப்பெற்ற அடியார்களைப்போல் மார்க்கண்டர் பக்தர் அல்லர் என்று தான் கூறமுடியுமா? பின்னர் எந்தக் காரணத்தால் அவருடைய பெயரை ஆரூரர் விட்டுவிட்டார்? எவ்வளவு ஆராய்ந்தாலும் ஒரே வழியில்தான் இதற்கு விடை கூற இயலும். மார்க்கண்டேயருடைய வரலாற்றை ஒருவேளை மறதியினால் விட்டுவிட்டார் என்று சமாதானம் கூறினாலும் மற்ற உதாரணங்களும் சில உள. சிதம்பரம் சென்று பெருமானின் ஆனந்தத் தாண்டவத் தைக் கண்டு களிக்காத அடியார்களே இல்லை. சைவ சமயா சாரியர்கள் என்று கூறப்பெறும் நால்வர் பெருமக்களும் தில்லையில் பல பாடல்கள் பாடியுள்ளனர். அத்தகைய புகழ் பெற்ற தில்லைப் பதிக்குப் பழமையான பல பெயர்களுள் "புலியூர் என்பதும் ஒரு பெயராகும். தேவாரத்திலேயே பல இடங்களிலும் பயின்று வரும் இந்தப் பெயர் காரணப் பெயராகும். வியாக்கிரபாதர் எனப் பெறும் புலிக்கால் முனிவர் வழிபட்ட காரணத்தால் புலியூர் என்ற பெயரைப் பெற்றது. எனவே, புலியூர் என்று கூறும் பொழுதெல்லாம் புலிக்கால் முனிவர் நினைவு வந்தே தீரும் அன்றோ? அத் தகைய ஒரு முனிவர் பெயரைத் திருத்தொண்டத் தொகை யில் ஏன் ஆரூரர் பாடவில்லை? மார்க்கண்டரை மறந்திருக் கலாம் என்று கூறினாலும், இதனை அவ்வாறு கூறல் இய லாது. ஏன் எனில், திருத்தொண்டத் தொகையில் தொடக்