பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i82 - தேசீய இலக்கியம் என்றால் இவரை எவ்வாறு நண்பன் என்று கூறுவது? என்ற பொருளில் அமைந்துள்ளது. என்னதான் இப் பாடலில் வேடிக்கை இருப்பினும் பாட்டின் உள்ளே ஆரூரரின் ஆழ்ந்த அன்பும், இறைவனுடைய பெருமையும், உயிர்களினுடைய உதவியற்ற தன்மையும், அவனுடைய கருணையின் பெருமை யும் அடங்கி இருத்தல் கண்கூடு. ஆழ்ந்த அன்பில் பிறந்த அவலச்சுவை அல்லது சோகரசம் இப் பாட்டில் அமைந் துள்ளது.

14. அன்பே சிவம்

சிவராத்திரி என்ற ஒரு நன்னாள் இறைவனுக்கு உகந்த நாள். சிவராத்திரி என்று குறிப்பிட்ட ஒரு நாளில் தான் ஆண்டவனை நினைக்க வேண்டுமோ என்று பலர் நினைக்கலாம். ஆனால், நம்முடைய பெரியவர்கள் மிகவும் ஆராய்ந்துபோர்த்துத்தான் இப்படிப்பட்ட நாள்களையெல்லாம் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். மனிதனுடைய தோற் ற ம் என்று தொடங்கிற்று என்று உறுதியாகச் சொல்லமுடியாது; என்றாலும் அவன் வாழ்வு வெகு விரைவாக நாகரிகம் முதிரப் பெற்று அறிவு உலகத்திலே வளர்ச்சி அடைந்துகொண்டு வருவது கண்கூடு. இப் பரந்த உலகையும் அதில் இவ்வளவு நுகர்ச்சிப் பொருள்களையும் நம்மை அனுபவிக்குமாறு செய்த இறைவனுடைய கருணையை மனிதன் அல்லும் பகலும் நினைத்தல் வேண்டும் ஆனால் வாழ்வின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்ற நிலையிலே, பல சமயங் களில் மனிதன் தன்னுடைய கடமையைக்கூட மறந்து விடுகின்றான். எவ்வளவு ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின் சில கடமைகளை அவன் வகுந்துக் கொண்டாலும், பல சமயங் களில் அவற்றை விட்டு நழுவவேண்டி ஏற்பட்டு விடுகிறது. இம்மாதிரி மனிதனுடைய வாழ்வு மாறிக் கொண்டு போகிற காரணத்தால், பெரியவர்கள் விழாக்காலங்களை