பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தேசிய இலக்கியம் தனிப்பட்ட முறையிலே ஆண்டவனை நினைக்கின்றோம் என்பதுதான் கருத்து. அதிலும், உலக வாழ்வில் ஈடுபட்டு அனைத்தையும் மறந்து வேகமாக ஒடிக்கொண்டிருக்கின்ற நாம் ஒர் இரவு முழுவதும் கண்விழித்து ஆண்டவனை மூன்று காலத்திலும் வழிபட வேண்டுமென்று வைத்ததன் காரணம் ஒன்றுண்டு. வேகமான வாழ்க்கையிலேயும் அமைதியான வாழ்க்கையை அடைவதற்கு இதனை வழியாக வகுத்தார்கள். இப்படிப் பட்ட காரணங்களை வைத்துத்தான் இத் தமிழ்நாட்டில் 12 மாதங்களிலும் 12 பெரு விழாக்களை அமைத்தார்கள். அவற்றுள்ளே ஒன்றுதான் சிவராத்திரி என்று சொல்லப் படுவது. இந்த நாளின் சிறப்பைப் பற்றிப் பழங்காலத்தில் எத்தனையோ கதைகளும் வரலாறுகளும் எழுதினார்கள். திருடன் ஒருவன் அரசனுக்குப் பயந்துகொண்டு, காட்டிலே ஒடி ஒளிந்து மரத்தின்மேலே ஏறியிருந்தான். அவனுடைய கைகால்களெல்லாம் நடுக்கம் எடுத்தன. அப்பொழுது அவனையும் அறியாமல் அந்தப் பயத்தைப் போக்கிக் கொள்ளுவதற்கு அந்த மரத்தின் தழைகளையெல்லாம் பறித்துப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான். அம் மாத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. திருடன் ஏறி இருந்த மரம் வில்வ மரமாக இருந்தமையின், அவன் பறித்துப் போட்ட வில்வ இலைகள் கீழே உள்ள சிவலிங்கத்தின் மேல் அர்ச்சனையாக விழுந்தன. அவன் வேண்டுமென்று அந்த அர்ச்சனையைச் செய்யாவிட்டாலும் வில்வ மரத்தின்மேல் ஏறியிருந்து, அந்த வில்வ இலைகளையெல்லாம் பறித்துப் பறித்துப் போட, அது ஆண்டவனுக்குச் செய்த அர்ச்சனை யாக ஆகிவிட்டது எனவே, யமபடர்கள் அவனை அழைத்துக்கொண்டு போக முற்படுகையில், சிவகணங்கள் வந்து இவன் சிவராத்திரி முழுவதும் விழித்துக்கொண்டிருந்து இறைவனுக்கு வில்வத்தினாலே அர்ச்சனை செய்தான். ஆதலால், நாங்கள் அழைத்துக் கொண்டு போகிறோம்: என்று சொன்னார்களாம்,