பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.ச. ஞானசம்பந்தன் 20 ! . அதனால் தவறில்லை. ஆனால், இந்தக் கருவிக்காகத் தன்னையே முழுவதுமாகத் தியாகம் பண்ணத் தேவை யில்லை. அறிவினாலே வாழ வழி கண்டுபிடித்த இவர்களைக் காட்டிலும், அன்பினாலே வாழ வழி கண்டுபிடித்தவர்களைத் தான் பெரியதாகப் போற்றியது உலகம். உலகத்திலுள்ள நீதி நூல்களை எல்லாம் கற்றுப் பார்த்தார்கள் நம்மவர்கள். நீதி நூல்கள் கைகாட்டி மரங்கள். இன்ன இடத்திற்குப் போவதற்கு இது வழி என்று காட்டுமே, தவிர, அதற்கடி யிலேயே போய் உட்கார்ந்து கொண்டால் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு சென்றுவிடுமா? வேதம், திருக்குறள் முதலான நீதி நூல்கள் அனைத்தை யும் உள்ளடக்கி, "வேதம் ஒதில் என்? வேள்விகள் செய்கில் என்?" என்று திருநாவுக்கரசர் பாடுகிறார். இவையெல்லாம் கருவிகளே தவிர, மனத்தைக்கொண்டு செலுத்தக் கூடியவை அல்ல. அப்படியானால், இவற்றைக் கற்க வேண்டாவா? கற்கத்தான் வேண்டும்; ஆனால், அடிப்படையை மறந்து விடக்கூடாது. கைகாட்டி என்ன சொல்கிறது? இதன் வழி யாக நீ போ’ என்று சொல்கிறது அதை விட்டுவிட்டு மரமே பெரிது. அதில் எழுதியிருக்கிற செங்கல்பட்டு என்ற பெயரே பெரிது’ என்று அதனடியில் உட்கார்ந்து கொண்டால் ஒரு நாளும் செங்கல்பட்டு போய்ச் சேரமாட்டார். அதுபோல, வேதம் கற்பதும், வேள்விகள் செய்வதும் உன்னைக் கொண்டு செலுத்துகிற வழிகள். அந்த வழிகளிலே நீ செல்லவேண்டும். ஆனால், அதனை மாத்திரம் கற்றுக்கொண்டிருப்பதில் ஒரு பயனுமில்லை என்பதைச் சொல்ல வந்தவர்கள் மேலே அழகாகப் பாடினார்கள். அடிப்படையை மறந்துவிட்டு நீ வேதங் கற்பதனாலும் வேள்விக் கிரியைகன்ளைச் செய்வத னாலும் பயன் விளையாது. உள்ளத்தில் அன்பு இருந்து, மேலே கூறியவற்றை ஒருவேளை நீ செய்யவில்லை என்றா லும்கூடக் கவலையில்லை. ஆனால் அன்பு இல்லாமல் நீ இவை அனைத்தையும் செய்தாலும் பயன் இல்லை என்ற கருத்துப்பட