பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 23 இவ்வாறு குறிக்கிறோம். சேக்கிழார் அவ்வாறு சென்றவர் தாம். என்றாலும் தமிழ் இனத்தின் சிறப்பியல்புகள் அவருடைய இலக்கியத்தில் இடம் பெறுகின்றன. கிரேக்க தேசீய மனப்பான்மை என்று கூறியவுடன், கிரேக்கர்கள் அனைவரும் ஒன்றாகவே நினைத்தவர்கள்: அவர்கள் நினைவை அவர்கள் இலக்கியம் வடித்துத் தரு கிறது என்பது கருத்தன்று. பல்வேறு கிரேக்கர்கள் பல் வேறு நினைவுகளையும் கருத்துகளையும் கொண்டிருந்தனர் என்பதும், அவர் இலக்கியங்களும் பல்வேறு நினைவுகளை வெளியிட்டன என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். என்றாலும் இக் கிரேக்க இலக்கியங்களில் காணப்பெறும் மாறுபாடுகளையும் வேற்றுமைகளையும் கடந்து பார்த்தால் கிரேக்க இனத்தின் அழியாத சில பண்புகளை இவ் விலக் கியங்கள் வெளியிடுதலைக் காணலாம். இப் பண்புகளைக் கொண்டுதான் கிரேக்கர்களின் குறிக்கோள்கள் எவை எவை என்றும். வாழ்க்கைபற்றி அவர்கள் என்ன நினைத் தார்கள் என்றும் கூறுகிறோம். - மேலே கிரேக்கத்திற்குக் கூறிய அனைத்தையும் அப்படியே தமிழ் இலக்கியத்திற்கும் கூறலாம். இப் பொதுப் பண்பாட்டை வைத்துதான் தமிழன் வாழ்க்கை, குறிக்கோள் முதலியவை இன்னவை என்று குறிக்கிறோம். கற்றறிந்த ஒவ்வொருவரும் உலகைச் சுற்றிப் பார்ப்பது அறிவு வளர்ச்சிக்குச் சிறந்தது என்று கூறுகிறோம். இன்றைய உலகை நாம் சுற்றிப் பார்ப்பதானால், இக் காலத் தில் வாழும் மக்களைப் பற்றி மட்டுமே அறிய முடியும். ஆனால், கடந்து போன காலங்களில் வாழ்ந்தவர்களைப் பற்றி அறிய வேண்டுமாயின் என்ன வழி உண்டு ? அந் நாட்டு இலக்கியங்களே அதற்கு உதவுபவை. ஒரு நாட்டின் இலக்கியம், அந் நாட்டு மக்களின் பண்பாடு முதலியவற்றை விரித்துரைக்கும் பல்வகைச் சாதனங்களுள் ஒன்று என்பது மட்டுமன்று தலையாயு