பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சி. ஞானசம்பந்தன் ήg வாழ்க்கையைக் கூறுவதுதானே உண்மையான சரித்திரம்? சமுதாயம் என்பது பல மக்கள் கூடிய ஒன்றுதானே? சமுதாயத்தின் சரித்திரம் என்றால் அதில் வாழும் மக்களின் சரிதமாகத்தானே அது இருத்தல்வேண்டும்? தாமஸ் கார்லைல் என்ற பெரியார், சரித்திரம் என்பது பலருடைய வாழ்க்கை வரலாகும்' என்று கூறியது இங்கே நோக்கத் தக்கது சரித்திரத்தில் அரசர்களும், அரசர் அவைகளும், போர்களும் பின்னிடம் பெற, மக்களும், அவர்கள் வாழ்க்கை யும், கோயில்களும், அவர்கள் தொழில்களும் முதலிடம்பெற வேண்டிய காலம் நெருங்கிவிட்டது' என்று கூறினார் கார்லைல். ஆனால், இன்றளவும் அத்தகைய சரித்திரம் மிகுதியாக வந்ததாகத் தெரியவில்லை. தமிழ் இலக்கியத்தை எடுந்துக்கொண்டால் சரிதமோ, சரித்திரமோ மிகுதியும் இருந்தன என்று கூறுவதற்கில்லை. உரைநடை நூல்களே இல்லாதிருந்தமையால் இவ்வகை நூல்கள் தோன்றாமல் இருந்திருக்கலாம். அன்றியும் தனிப் பட்டவர்கள் வாழ்க்கை வரலாற்றில் மிகுதியும் கவனம் செலுத்துகிற பழககமும் இந்தத் தமிழ்நாட்டில் மிகக் குறைவு 'பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' (புறம் : 192) என்று கூறிய இனம் அல்லவா இது? ஆகவே வாழ்க்கை வரலாறு அல்லது சரிதம் என்பது மிகவும் அருமையாகவே காணப்படுகிறது. திருத்தொண்டர் புராணம் சரிதமா அல்லது சரித்திரமா? அதனை சரிதம் என்றும் கூறலாம்; சரித்திரம் என்று கூற லாம். இவ் இரண்டு. வகை நூல்களிலும் காணப்பெறும் பல நல்லியல்புகளையும் திருத்தொண்டர் புராணம் கொண் டிருக்கிறது. சங்க காலப் பாடல்கள் அனைத்தும் மக்களைப் பற்றியனவே என்றாலும். அகப்பாடல்கள் தவிர மற்றையவை மனிதனின் புறச்செயல்களைப் பற்றிப் பாடினவே தவிர, அவனுடைய மனத்தைப் பற்றிக்கூேறவில்லை. ஒரோ வழிக் கூறினும் அவன் புறச்செயல்களுக்கு ஆதாரமாக அம்மனம் அமைந்தபொழுதுதான் மனஇயல்பை வெளிவிட்டன.