பக்கம்:தேடி வந்த குயில்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி தலைமையில் கனல் வீசும் சொற்பொழிவு கோனாபட்டில் பல கூட்டங்களில் பாரதிதாசன் பேசினார். எல்லாம் தன்மானக் கழகக் கூட்டங்கள். அந்தக் காலத்துத் தன்மானக் கழகக் கூட்டங்கள் காரசாரமாக இருக்கும். எதையும் எடுத்தெறிந்து பேசுவதுதான் சொற் பொழிவாளர்களின் வழக்கம். கூடியிருப்பவர்கள் கோபப்படக்கூடாது என்றோ, கூட்டம் கைதட்ட வேண்டும் என்றோ அவர்கள் பேசுவதில்லை. கூடியிருப்பவர்கள் தன் பேச்சில் வேதனைப்படுவார்களே, தன்னை வெறுப்பார்களே என்று அவர்கள் சிறிது கூட இறங்கி வருவதில்லை. இதற்குப் பாரதிதாசனும் விலக்கல்ல என்பதைக் காட்டிலும். இந்தப் போக்கில் அவர் தலைவர் என்றே கூறிவிடலாம். அரட்டல் மிரட்டல் நிறைந்த பேச்சே கருத்துக் குருடர் களின் வயிற்றைக் கலக்கிவிடும். சிங்கம் போல் அவர் முழங்குகிற போதே கூட்டத்தில் கேள்வி கேட்டுக் கலகம் செய்ய வந்தவர்கள் பீதியுற்று அடங்கி போவார்கள். கேள்விகளுக்குப் பதிலும் சாந்தமாக வராது; சாட்டையடி போல் தான் வரும். இளைஞர்களுக்குப் பாரதிதாசன் கூட்டம் என்றால் கொண்டாட்டம் தான்.