பக்கம்:தேடி வந்த குயில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தங்குடியில் பாரதிதாசன்

37


நான் அப்பொழுது முழுச் சைவம். ஓர் ஓரத்து இலையில் மிகக் கவனமாக அசைவப் பொருள்கள் பரிமாரவிடாமல் தடுத்துக் கொண்டு சாப்பிட்டேன். என்னையும் எனது சைவத்தையும் கிண்டல் செய்து கொண்டே கவிஞர் வயிறார உணவுண்டார். அவருடைய உணவுப் பழக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் எங்கள் வீட்டில் சைவ விருந்து வைத்தது குறித்து வருத்தப் பட்டுக் கொண்டிருந்தேன் நான். மறுநாள் கவிஞரை ஒரு மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு, தியாகராசர் வேட்டைக் காட்டுக்கு அழைத்துச் சென்றார். பறவைகளையும் விலங்குகளையும் வேட்டைத்துப் பாக்கியால் சுட்டு எடுத்துக் கொண்டு வந்து கவிஞருக்கு விருந்து வைத்தார். ஆத்தங்குடித் திராவிடக் கழகத்திற் கென்று நூல்நிலை யம் ஒன்று வைத்துக் கொள்ளுங்களேன். குடியரசு இதழுக்கு உறுப்பினர் ஆகுங்கள். குடியரசு வெளியீடுகள் அறுபது புத்தகங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் இளைஞர் களும் படிக்க வேண்டும். உங்கள் நூல்நிலையத்தில் அவை இருக்க வேண்டும். என்று கூறிய பாவேந்தர், தொடர்ந்து நான் ஒரு கடிதம் எழுதித் தருகிறேன். அதைக் குடியரசு அலுவலகத்துக்கு அனுப்புங்கள். பாதிவிலைக்கு நூல்கள் வந்து சேரும் என்று கூறிக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அறுபது புத்தகங்களுமே மலிவுப் பதிப்புகள். அவற்றின் மொத்த விலையே நாற்பது ரூபாய்தான். எங்களுக்கு அவை இருபது ரூபாய்க்குக் கிடைத்தன. - அவை யனைத்தையும் ஆத்தங்குடியில் இருந்த இளைஞர் கள் பலர் படித்தனர். சுயமரியாதை எண்ணங்கள் விதைக்கப் பட்டன. நாத்திக நோக்கு மலர்ந்தது. மற்றவர்கள் மாறினார் களோ இல்லையோ நான் நாத்திகனாகி லிட்டேன்.