பக்கம்:தேடி வந்த குயில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேடிவந்த குயில்

67


  • நான் என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்விக் குறியோடு நிற்கிறேன்.

பாவேந்தர் என்னைத் தேடி வந்திருக்கிறார் என்ற எண்ணம் நெஞ்சில் பெருமையுணர்வை உண்டாக்குகிறது. பேச்சு எழவில்லை. பணிவோடு அவர் பேசுவதை எதிர் பார்த்து நிற்கிறேன்.

பாவேந்தர் பேசத் தொடங்குகிறார்.

குயில் வெளிவர வேண்டும், சரியான அச்சகம் வேண்டும். நீ இங்கே இருக்கிறாய் என்று கேள்விப்பட்டு வந்தேன். உன்னிடம் அச்சுப் பணியை ஒப்படைக்கிறேன். என்னால் அடிக்கடி நேரில் வர முடியாது. இந்தப் பையன் என்னிடம் பணிபுரிகிறார். இவர் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வார். மிகப் பொறுப்பான பையன். இவர் மூலம் நீ என்னோடு தொடர்பு கொள்ளலாம், மெய்ப்புகளை இவர் மூலம் அனுப்பி வைக்கலாம்.”

'நானே கொண்டு வருகிறேன் ஐயா,”

‘'வேண்டாம், வேலை தொடர்பாக நீ அலைய வேண்டியதில்லை, பொன்னடி பார்த்துக் கொள்வார். ஓய்வு கிடைக்கும் போது நீ வந்து பார்.” -

இவ்வாறு கட்டளையிட்ட பாவேந்தர் ஒர் இதழுக் கென்று கொண்டு வந்திருந்த மூலப்படிகளை ஒப்படைத்து, ஒரு வார கால அளவில் அச்சுவேலை முடிய வேண்டும் என்றும் பணித்துவிட்டு, பொன்னடியுடன் எழுந்து சென்றார்.

குறித்தபடி வேலை முடித்து குயில் இதழ்களை அனுப்பி வைத்தேன். மறுநாளே பொன்னடி வந்தார்.

"ஐயா. இதழ்கள் வந்தன. பட்டியல் வரவில்லை, பட்டியல் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்து வரும்படி. பாவேந்தர் அனுப்பி வைத்தார்.' என்றார்,