பக்கம்:தேடி வந்த குயில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

தேடிவந்த குயில்


நான் அமர்ந்துவிட்டேன். ஆனால் இன்று நினைத்துப் பார்க்கிறேன். தான் எழுதிய பாடலைத் தானே பாடிப் பார்த்து அனுபவிக்க முடியாதவர் எப்படி முழுமையான கவிஞராக இருக்க முடியும்? பாவேந்தர் சொன்னது உண்மை தானே. இசைப் புலமையை வளர்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேனே என்று எண்ணுகிறேன். ஆனால் இன்று இலக்கணமே கவிதைக்குத் தேவையில்லை என்று ஒரு கூட் டம் வளர்ந்து வருவதைப் பார்க்கும் போது, பாவேந்தர் சொன்ன முழுமையான கவிஞர்களை இனி இந்த நாட்டில் பார்க்க முடியுமா என்ற ஐயமும் தோன்றுகிறது.

பாவேந்தர் முன்னிலையில் தமிழ்க் கவிஞர் மன்றத் தின் முதற் செயற்குழு அமைக்கப்பட்டது, செல்லம்மாள் பாரதி, நாரண துரைக்கண்ணன், சமதக்னி, நாகமுத்தையா, டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், தமிழழகன், வேழ வேந்தன், முருகு சுந்தரம், முகமது மைதீன், வல்லம் வெங்கடபதி ஆகியோருடன் நானும் செயற்குழு உறுப்பி னரானேன்.

இறுதியில் பாவேந்தர் பொன்னடியானையும் செயற்குழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வற்புறுத்தினார்.

- தன்னிடம் பணிபுரிபவர் என்று பாவேந்தர் தாழ்வாக எண்ணவில்லை. நல்ல கவிஞர்; அவருக்குச் சரிநிகரான இடம் தரவேண்டும் என்று முறை செய்தார். தமிழ்க் கவிஞர் மன்றத்தின் முதற் செயற்குழுவில் பாவேந்த ராலேயே முன்மொழியப் பெற்ற பெருமை பொன்னடி யானுக்குக் கிடைத்தது.

தான் தொடங்கிய தமிழ்க் கவிஞர் மன்றத்தைத் தொடர்ந்து நடத்தக் கூடியவர் இவர்தான் என்று முன் னறிந்து அவர் பொன்னடியைச் சேர்க்கச் செய்தார் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.