உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தாரம் எனை இருபத்து திங்கள் கழிந்தன! ஒரு திங்கள் சோலையிலே வந்ததுவோ எனத் தக்க காட்சி! கிள்ளை நிற்கின்றாள். இன்பக் கால்லையிலே அத்தானின் அன்புத் தொல்லையிலே அகப்பட்டுக் களிக்க! முத்தம் பெறுவதற்கு முன்பாகக் கரம் ஏனோ கன்னத்தைத் தடவுகிறது! சத்தம் வரும் திக்கெல்லாம் கண் நோக்குத் தாவுகிறது! மீட்ட வரும் யாழரசன் எங்கே யென்று இதய வீணை தவிக்கிறது! தாபம் தகிக்கிறது! கருகிப் போகும் முன்னாலே பயிர்க்கு மழை போலவே- உருகிச் சாகும் உளிபடாச் சிலை முன்பு ஒளித் தமிழன் வந்துவிட்டான். "அத்தான்!" என்றாள். இதழ்ப் போர் அறிவிப்பின்றி முழவின்றி முன் முடிவுமின்றித் தொடங்கிற்று ! இடையிடையே சொல் முத்து! வாணிபம் எவ்வாறென்றாள். மிக வளம் என் றான். "மின் வெட்டுக்காரிகள் யாராவது"...என இழுத்தாள். "யாருமில்லை" யென்று கூறி, "ஆரம் ஒன்று கொண்டு வந்தேன் அணிந்து கொள்' என எடுத்தான். 66 " ‘ஏது இது? ரோம் நகர வேலைப்பாடு....தமிழ் நாட்டு முத்து!” "யார் அளித்தார்?" 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/15&oldid=1687365" இலிருந்து மீள்விக்கப்பட்டது