பக்கம்:தேன்பாகு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31அன்று கணவர் வந்தவுடன் "உங்கள் திருட்டுத்தனம் எங்களுக்குத் தெரிந்து விட்டது" என்று கோபமாய்ச் சொன்னாள்.

"என்ன திருட்டுத்தனத்தைக் கண்டு விட்டாய்?" என்று செல்வர் கேட்டார்.

"நான் உங்களை நல்லவர் என்று எண்ணி யிருந்தேன். நீங்கள் பொல்லாதவர் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்" என்று அவள் சொன்னாள்.

"என்ன தெரிந்து கொண்டாய்? அதைச் சொல்” என்றார் அவள் கணவர்.

"அதைச் சொன்னால் வெட்கக்கேடு; ஊராரிடம் சொன்னால் மானமே போய் விடும்" என்றாள் அவர் மனைவி. -

"இன்னதென்று சொல்லாமல் ஏன் இப்படிக் கோபமாகப் பேசுகிறாய்?" என்று மறுபடியும் அவர் கேட்டார். -

"நீங்கள் வேறு ஒரு பெண்ணை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று குற்றம் சாட்டினாள் அவள்.

"வேறு பெண்ணா? என்ன உளறுகிறாய்!”

"நானா உளறுகிறேன்? உள்ளதைச் சொன் னால் எரிச்சல் என்பார்கள். நீங்கள் ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/33&oldid=1302170" இருந்து மீள்விக்கப்பட்டது