பக்கம்:தேன்பாகு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30


ஒரு செல்வர் அதிக விலை கொடுத்து ஒரு கண்ணாடியை வாங்கினார். அதை யாருக்கும் தெரியாமல் ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்துக் கொண்டார். யாரும் பார்க்காத கோத்தில் அந்தப் பெட்டியிடம் சென்று அதைத் திறந்து கண்ணாடியைப் பார்ப்பார். அதில் தன்முகம் தோன்றுவது கண்டு மகிழ்ச்சி அடைவார். இப்படிச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டேயிருந்து பிறகு பெட்டியை மூடி விடுவார்.

ஆரம்பத்தில் சிலகாலம் இதை யாரும் கவனிக்கவில்லை. சிலநாட்கள் கழிந்தன. அவருடைய மனைவி அவர்தனியே உள்ளே போய்க்கதவை மூடிக் கொண்டு என்னவோ செய்துவிட்டு வருவதைக் கவனித்தாள்...ஒவ்வொரு நாளும் அந்தச் செல்வர் ஒருவரும் அறியாதபடி அப்படிச் செய்ததனால் அவளுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவரைக் கேட்காமல் உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாதபோது அந்த அறையைத் திறந்து உள்ளே போனாள். மறுசாவி போட்டுப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அதில் இருந்த கண்ணாடியில் அவள் முகம் தெரிந்தது. ஆனால் அதுதன் முகம் என்று அவள் தெரிந்து கொள்ளவில்லை. யாரோ ஒரு பெண்மணியைத் தன் கணவர் அந்தப் பெட்டிக்குள் ஒளித்து வைத்திருக்கிறார் என்று எண்ணினாள். அவளுக்குத் தன் கணவர் மேல் கோபம் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/32&oldid=1302166" இருந்து மீள்விக்கப்பட்டது