பக்கம்:தேன்பாகு.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54

இருந்த பெண்ணை அரசகுமாரன் தட்டிக் கொண்டு போகிறானே என்ற ஆத்திரம் அவனுக்கு. குதிரையைத் தொடர்ந்து ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கி விழுந்து விட்டான். கெற்றியில் காயம்பட்டு இரத்தம் வழிந்தது.

குதிரையில் அப்போதுதான் சிறிது தூரம் போயிருந்த கனகவல்லி திரும்பிப் பார்த்தாள். சுப்பன் அடிபட்டு விழுந்திருப்பதைக் கண்டாள். உடனே, "கிறுத்துங்கள், குதிரையை நிறுத்துங் கள் என்று கத்தினாள். அரசகுமாரன் என்னவோ ஏதோ என்று பயந்து குதிரையை நிறுத்தினான்.

கனகலல்லி, 'என் மாமன் மகன் அடிபட்டுக் கிடக்கிறான். இரத்தம் வழிகிறது, அவனை இந்த நிலையில் விட்டுவிட்டுப் போய் நாம் கல்யாணம் செய்துகொள்வதா? அவனை உடனே கவனிக்க வேண்டும்' என்று படபடப்பாகக் கூறி 6ರrಗ ಕYT.

சரி உன் இஷ்டம் போல் செய், நான் அடுத்த வாரம் வருகிறேன்" என்று சொல்லி அவளை அவன் இறக்கிவிட்டுப் போய்விட்டான்.

கனகவல்லி சுப்பனை அணுகினாள். அவன் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தான். அவன் முகத்திலுள்ள இரத்தத்தைத் துடைத்து, முகத் தில் தண்ணிர் விட்டு அலம்பி, மெல்ல அவனை அழைத்துக் கொண்டு போனாள்.ஒர் ஆஸ்பத்தி ரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/56&oldid=581252" இருந்து மீள்விக்கப்பட்டது