பக்கம்:தேன்மழை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 அசோகன் எட்டாம் மாதம் எழமுடி யாமலும் கட்டுகள் விட்டும் கடுகடுப் புற்றும் ஒன்பதாம் மாதம் தின்பதை மறந்தும் முற்றிய மாதம் பத்துவந் துற்றதும் அங்கம் நொந்திடச் செங்கனி மங்கையர் குழிக்கிழங் கென்னும் குழந்தையைப் பெறுவர். எழுமதி யாகிய முழுமதி முகத்தினள் பழுதறு சொல்லினள் பண்கொண்ட வாயினள் தாங்குபுகழ் சுபத்தி ராங்கி என்பாள் புவிபுகழ் அசோகனை ஈன்ற பொழுதிலே துடித்திட வில்லையாம்! துன்புற வில்லையாம்! இடுப்பு நோக்காடும் இளைப்பும் சோகமும் ஏந்திழை மாதுக் கேற்பட வில்லையாம்! சோகம் என்றால் துயரமென் பதுபொருள். சோகம் தருவோன் சோகன்; அவ்வாறு சோகம் தராதவன் அசோகன் ஆவான்! வீரம் காட்டிய வேந்தன் அசோகன் கலிங்க நாட்டினைக் கலங்கிட வைத்தும் மாறுபட் டோரை வேரொடு வீழ்த்தியும் மன்னர் பலரை மயானமண் ணாக்கியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/106&oldid=926687" இலிருந்து மீள்விக்கப்பட்டது