பக்கம்:தேன்மழை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கடமை உரைகல்லில் சரிபார்த்த செம்பொன் போலே ஒளிவீசும் காலையில்நான் எழுந்தி ருந்து நுரைசெய்யும் ஆற்றில்நீ ராடச் செல்வேன் துணுக்கமுள்ள ஆசாரக் கோவை கூறும் வரிவெண்பா நீதியைப்பின் பற்றி வாழ்ந்து வருவதனால் நீரில்நான் உமிழ மாட்டேன் தரையில்நான் கால்விரலால் கீற மாட்டேன் தண்ணிரில் ஆடைதனைப் பிழிய மாட்டேன். சீரறிந்த நீதிகளில் நெஞ்சம் வைப்பேன் சித்திரத்தில் அன்றாடம் விழிகள் வைப்பேன் தேரறிந்த கோயிலுக்குப் போக மாட்டேன்

தேனறிந்த மல்லிகையை விடவே மாட்டேன் ஊரறிந்த பேரறிஞர் மேடைப் பேச்சை

ஒருநாளும் நான்கேட்கத் தவற மாட்டேன் பாரறிந்த பைந்தமிழை அழிக்க வேண்டிப் படைவந்தே எதிர்த்தாலும் அஞ்ச மாட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/114&oldid=926695" இலிருந்து மீள்விக்கப்பட்டது