பக்கம்:தேன்மழை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 112 ஈரத்திற் சிறந்தகடல் கத்தும் ஊரில் இருந்தவளாம் பரத்தைமாணிக் காத்தாள் என்பாள் நேரத்திற் கோர்வண்ண உடையும் ஒவ்வோர் நிமிடத்திற் கோர்நகையும் அணிவ துண்டாம் சாரத்திற் சிறந்தகவிச் சிலம்பும் சாத்தன் தந்தமணி மேகலையும் இருக்கும் போது பாரத்தைக் கொடுக்கின்ற நகையின் மீது பற்றுவைத்து நான்தொல்லை கொடுப்ப ಥಿಮೆಣ6ು! பலர்போற்றும் பகலில்நான் உறங்க மாட்டேன் பகலுறக்கம் உயிர்குறைக்கும் என்பதாலே கலைநூற்கள் அன்றாடம் பயில்வேன். வீட்டுக் கணக்குதனை எழுதிவைப்பேன் மாலைப் போதில் தலைவாரிப் பூச்சூடிக் கொண்டு தெற்குத் . தமிழ்த்தலைவர் என்கணவர் வருகை நோக்கி நிலைவாசல் முன்வந்தே எட்டிப் பார்ப்பேன் நெருப்புவெயில் வட்டமெனை எட்டிப் பார்க்கும்! கச்சிதமாய் உறங்கிக்கொண் டிருப்பேன், வீட்டில் கண்கலந்த என்கணவர் அருகில்வந்தே நச்சரிப்பார் நயமாகப் பேசிச் சற்றே நகரென்பார் நான்மறுப்பேன் ஊடல் தீர்ப்பார். இச்சமயம் ஒளியிலையே அத்தான் என்பேன். இருள்தானே பூனைக்கு வேண்டும்! என்பார் உச்சரிப்பு நின்றுவிடும் தொடுவார் ஈர உடைபோல்நான் அவருடலில் ஒட்டிக்கொள்வேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/115&oldid=926696" இலிருந்து மீள்விக்கப்பட்டது