பக்கம்:தேன்மழை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 வன்னிய வீரன் காந்தவ ராயன் கணிகையை நோக்கித் தவளை குதிக்கும் தடாகத்தில் வளராக் குவளை சிவந்தது குமுதம் வெளுத்தது கோதையே! என்று கூறினான். அதுகேட்டுச் சீரொடு நோக்கிச் சிரித்தபடி திரும்பிக் கொண்டனள் கொலைசெயும் நோக்கம் கொண்டவள். நின்றவள் நகர்ந்தாள் நிழலும் நகர்ந்தது, மங்கை நகரவே மன்னனும் நகர்ந்தனன். மயக்கிய மங்கையும் மயங்கிய மன்னனும் பள்ளியறை நோக்கிப் பறந்து சென்றனர்! தொட்டான்! தொட்டான்!! கவிழ்ந்து பூப்பூத்து நிமிர்ந்துகாய் காய்க்கும் எள்ளில் எடுத்தநல் லெண்ணெயின் நுரைபோல் மென்மை கொண்ட மென்மலர் தூவிய மஞ்சத்தில் அமர்ந்தனள் மன்னனும் அமர்ந்தனன் தக்கோலம் தின்று தலையில்பூச் குடிப் பொய்க்கோலம் செய்த புணரிப் பரத்தை அழகுசெந் தினையின் அரிசியைப் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/140&oldid=926721" இலிருந்து மீள்விக்கப்பட்டது