பக்கம்:தேன்மழை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 138 நரம்பு நிரம்பிய நல்யாழ் எடுத்தே இசைய வைத்திடும் இசைத்தமிழ் வளர்த்தனள்! மன்னவன் கேட்டு மயங்கினான் மயங்கி மெத்தைப் பரத்தையின் மெல்லிய கைவிரற். கொத்துக்கு முத்தம் கொடுத்து நிமிர்ந்தான்! அமுதமா? நஞ்சா? எச்சில் பரத்தை இடம்விட் டெழுந்துபோய்க் கொல்லும் மருந்தைக் கொட்டிக் கலந்த பழச்சாறு கொணர்ந்தே "பருகுவீர்" என்றனள். "பாவைநீ இருக்கையில் பழச்சா றெதற்கு வேண்டாம் வஞ்சியே வேண்டாம்" என்றனன். "வெண்ணிலா வெளிச்சம் வீண்மீ திருப்பினும் எண்ணெய் விளக்கினை ஏற்றாதார் உண்டோ பருகுவீர்" என்றே பரத்தைவற் புறுத்தவே கிண்ணச் சாற்றினைக் கிளர்ச்சியொடு பருகினான். வீரன் வீழ்ந்தான்! ஆதிப் பொதுமகள் அளித்தசா றதனில் தோன்றா எழுவாய்போல் தோன்றா திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/141&oldid=926722" இலிருந்து மீள்விக்கப்பட்டது