பக்கம்:தேன்மழை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 178 கடல்நீரைத் தொடுவதுபோல் நீல வானம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்த போதும் நெடுவானம் கடல்நீரைத் தொடுவ தில்லை. நிழல்படிந்தோ ஆடையழுக் காகும்? அந்த முடிவேந்தன் மகளான மேரி என்பாள் மோகத்தின் வேகத்தால் தழுவி னாலும் உடைமாற்றி நடைமாற்றும் மாதே! நானென் உள்ளத்தைப் பறிகொடுத்து விடவே மாட்டேன். பகைதடுக்கி வீழாத யானோ இங்கே பழுத்தநிற நெருப்பினிலே கொழுத்து வீங்கும் புகைதடுக்கி வீழ்த்திடுவேன்? என்னைப் போன்ற போர்வீரன் இப்புவியில் உள்ள மக்கள் தொகைதடுத்தே எதிர்த்தாலும் அஞ்ச மாட்டான். தோள்வலிமை இலாதவன்போல் கெஞ்ச மாட்டான். சுகந்தடுக்கி வீழ்வதுண்டு சிலபேர்; யானோ துன்பங்கள் தடுத்தாலும் தளர மாட்டேன். நதிநம்மைப் பிரிக்கவில்லை! பிரிந்தால் GuarGణా நானந்தப் பிரிவினையை வீழ்த்தி வெல்வேன் சதிநம்மைப் பிரிக்கவில்லை; பிரித்தால் கண்ணே சாதிக்கப் பிறந்தோன்யான் வெற்றி காண்பேன். மதம்நம்மைப் பிரிக்கவில்லை; பிரித்தால் காதல் மாதேநான் அப்போதும் அடைவேன் உன்னை. விதியன்றோ பிரித்துளது நம்மை! அந்த விதியினையார் இப்புவியில் வெல்லக் கூடும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/181&oldid=926762" இலிருந்து மீள்விக்கப்பட்டது