பக்கம்:தேன்மழை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 நெப்போலியன் நினைக்கின்றான் கதைமாறி விட்டதென்று கலங்கி உப்புக் கண்ணிரால் நீநனைந்து கொள்ள வேண்டாம். சதிகாரன் இவனன்றோ? என்றெண் ணாதே! சபிக்காதே நீயென்னை, வாழ்வு தந்த மதுமாது நீயெங்கே! பகைமை கொண்ட மன்னவனின் மகளெங்கே! இனிநான் இங்கே! அதிகாரப் பத்தினியைக் கண்ணால் காண்பேன் ஆருயிரே நானுன்னை உளத்தால் காண்பேன். அறிவுள்ள மங்கையவ ளிடத்தில் பூவும் அழகியிடம் செம்பொன்னும் தருதல் வேண்டும். பிறையுள்ள வானத்தின் மீனே! காதற் பேச்சினிலே சிறந்தவளே அழகுப் பெண்ணே! குறைகொள்ளர்ச் செம்பொன்னைப் பூத்த பூவைக் கொடுத்துவந்தேன் உன்னிடத்தில் ஒவ்வோர் நாளும் நிறைவெள்ளம் போன்றவளே நிலவுப் பூவே நெஞ்சிருக்கும் வரையுன்றன் நினைவி ருக்கும்! இப்படிக்கு, நெப்போலியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/182&oldid=926763" இலிருந்து மீள்விக்கப்பட்டது