பக்கம்:தேன்மழை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை வேண்டும் பலர்புகழும் செங்கதிர்போல் விளங்கும் சேது பதிக்கரசே! படைக்கரசே! எங்கள் நாட்டின் நிலைதளர்ந்த நேரத்தில் தங்கட் கிந்த நீட்டோலை தீட்டுகின்றேன். புதுமை செய்யும் கலைஞர்பலர் வாழ்ந்துவரும் மதுரை மீது கல்லெறியும் கூட்டத்தார் எருமை நாட்டார் அலையெனவே முன்னேறி அங்கு மிங்கும் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடு கின்றார். இரும்புதந்த நெஞ்சுடையான், பாம்பின் பல்லில் இடம்பெற்ற நஞ்சுடையான், எருமை நாட்டான் கரும்புதந்த மாதர்கருங் குழல விழ்ந்து கவிழ்ந்தாற்போல் கூடாரம் அமைத்து விட்டான் அரும்புதந்த சிரிப்புடைய பெண்டிர் கற்பை அழகுதந்த இரவினிலே கெடுத்தும்: கல்வி வரம்புதந்த சுவடிகளை எரித்தும்; நாட்டின் வரலாற்றை மாற்றுதற்கு முயலு கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/183&oldid=926764" இலிருந்து மீள்விக்கப்பட்டது