பக்கம்:தேன்மழை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 படை வேண்டும் வெண்ணிலவு தன்நெற்றித் தழும்பை விட்டு விடுவதில்லை; நீரில்வாழ் முதலை மூர்க்கன் கொண்டதனை விடுவதில்லை; அந்த நோக்கம் கொண்டவனாம் கந்திருவ நரச ராசன் திண்டுதிண்டாய்ப் பாராங்கல் படுத்தி ருக்கும் திண்டுக்கல் நகரத்தைப் பிடித்து விட்டான். சண்டைவெறி கொண்டிருக்கும் எருமை நாட்டான் சத்தியமங் கலம்வரையில் வந்து விட்டான். கல்லைவைத்தும் கருங்கடலின் நீரை வைத்தும் கற்றறிந்தார் தமிழ்நாட்டுக் கெல்லை வைத்தார். சொல்லைவைத்தும் சொல்குறிக்கும் பொருளை வைத்தும் தொல்புலவர் பொய்யாத புகழை வைத்தார். முல்லைவைத்துக் காடுகளைக் கடந்து, நாட்டின் முகம்போன்ற எல்லையில்கால் வைத்து விட்டான். எல்லையிலே பகைவர்தம் காலை வைத்தல் இதயத்தில் தீவைத்தல் போன்ற தாகும். தென்னாட்டை வடநாட்டான் தாக்க வில்லை. தென்னவனே தென்புலத்தைத் தாக்கு கின்றான். தன்மீதே தீவைத்து கொண்டு சாதல் தற்கொலையாம்? அக்கொலைபோல் இந்த நாட்டை முன்னாளில் அரசாண்டு வந்த மூன்று முடிவேந்தர் தம்மைத்தாம் தாக்கிக் கொண்டார். இன்றேனும் மாறிற்றா நிலைமை? இல்லை; ஏனென்றால் இனஉணர்ச்சி தமிழர்க் கில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/184&oldid=926765" இலிருந்து மீள்விக்கப்பட்டது