பக்கம்:தேன்மழை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 வாழைப்பூ வேதாந்தம் நெருப்பினிலே நெய்யூற்றி வேள்வி செய்தே நேரத்தைப் பாழாக்கி ஒவ்வோர் நாளும் சிரிப்பினிலே மணஞ்செலுத்தி உண்டு றங்கிச் சிறுசெயலில் ஈடுபடும் வைதீ கத்தார் கரிப்பினிலே துவர்ப்பினிலே புளிப்பு காரம் கசப்பினிலே மனஞ்செலுத்தி மகிழ்வா ரன்றி இரக்கமிலா நெஞ்சத்தார் ஒருநா ளேனும் இனிப்புமிகு பொருள்தேட முயல்வ தில்லை. மைகண்ட விழிமாதர் வெளிப்பு றத்தில் வரக்கண்டு வெறிபிடித்த மனத்த ராகி நொய்கண்ட கோழியெனக் கொத்தச் செல்வர். நூதனமாய் வைதீகம் பேசிப் பேசிக் கைகண்ட பேர்வழிகள் அவர்கள்! ஆட்டின் கறிகண்டால் விடமாட்டார்! பணத்தை மூடும் பைகண்டார் பாயகலம் கண்டார் அன்றிப் படிப்பகலம் கண்டவரே யாரு மில்லை! சாதியென்பார் மதமென்பார் சங்க டத்தைச் சடங்கென்பார் சாத்திரகோத் திரங்க ளென்பார் நீதியென்பார் மனுநீதி சிறந்த தென்பார் நிலையற்ற உடலென்பார் நெய்பால் உண்பார். வேதியர்யாம் வீதியர்நீர் என்பார். எல்லாம் விதியென்பார் வினையென்பார் வேத மென்பார் ஒதுகலை ஒருசிலர்க்கே உரிய தென்பார் ஊழ்வினையே வையத்தின் வரலா றென்பார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/188&oldid=926769" இலிருந்து மீள்விக்கப்பட்டது