பக்கம்:தேன்மழை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 1.86 புண்ணுக்கு மருந்தறிவார் இரும்பின் மீது பொருந்தியுள்ள துருநீங்க வழியும் சொல்வார் கண்ணுக்கு மருந்தறிவார்; பயிரோ டுள்ள களையகற்றும் கலையறிவார்; தெய்வ பக்தி விண்ணுக்கு நமையனுப்பி வைக்கும் என்றே வேதாந்தம் பேசிடுவார்; நாட்டில் தோன்றும் சண்டைக்கும் சாதிமத நோய்க ளுக்கும் சரியான மருந்தைமட்டும் அறிந்தா ரில்லை! கனியறிவார் காயறிவார் எனினும் காதற் கனியிலுள்ள சுண்வதனை அறிய மாட்டார். தினையறிவார் நெல்லறிவார் குறிஞ்சிக் காதல் திணைகூறும் நுட்பத்தை அறிய மாட்டார். மனையறிவார் நிலமறிவார் மனைவி என்பாள் மனைக்குவிளக் கென்பதனை அறிய மாட்டார். இனியறிவார் என்பதற்கும் வழியே இல்லை ஏனென்றால் பகுத்தறிவே அவர்கட் கில்லை! அல்லிப்பூ முல்லைப்பூ தாம ரைப்பூ அத்தனையும் வானத்தை நோக்கிப் பூக்கும் மெல்லியநல் வாழைமட்டும் தலைகு னிந்து வீதிமண்ணைப் பார்த்தபடி பூக்கும்; நாட்டின் நல்லவர்கள் என்கருத்தை ஆதரிக்க நாலைந்து வைதீக வெறியர் மட்டும் வல்லமையே இல்லாமல் கூவு கின்றார் வாழைப்பூ வேதாந்தம் பேசு கின்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/189&oldid=926770" இலிருந்து மீள்விக்கப்பட்டது