பக்கம்:தேன்மழை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் (1891 - 1964) புதுவையிலே கடலுண்டு காட்சி யுண்டு புதுவையிலே புகழ்பெற்றார் சிலைகள் உண்டு புதுவையிலே சங்கரதாஸ் சமாதி யுண்டு புதுவையிலே பெரும்புலவர் கூட்ட முண்டு புதுவையிலே அரவிந்தர் இருந்த துண்டு புதுவையிலே பாரதியார் வாழ்ந்த துண்டு புதுவையிலே புதுமையுண்டா? உண்டு பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டார் உண்டா? உண்டு! பாட்டேயென் தொழிலென்று சொல்லிக் கொண்டார் பாரதியார். அவ்வாறே எழுதி வந்தார். நீட்டோலைப் பாட்டதனால் இந்த நாட்டின் நித்திரையை அவர்கல்ைத்தார். அவர்க்குப் பின்னர் காட்டாற்று வெள்ளத்தின் வேகம் கொண்ட கவிதைகளால் பாவேந்தர் புரட்சி செய்தார். ஒட்டாண்டிப் பாட்டெழுதி வந்தார்க் கெல்லாம் ஓய்வளித்தார்! தம்பாட்டால் வாழ்வ ளித்தார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/225&oldid=926806" இலிருந்து மீள்விக்கப்பட்டது