பக்கம்:தேன்மழை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 சைவத்தை மறந்தா ரில்லை சமணத்தை மறுத்தா ரில்லை தெய்வத்தைப் பழித்தா ரில்லை - செழித்தசெந் தமிழன் மீது கைவைக்க முயன்றார் தம்மைக் கண்டிக்க மறந்தா ரில்லை பொய்வைத்த சாதி பேதப் புரட்டினை ஏற்றா ரில்லை ! பழத்தினில் இனிமை வைத்தான் படைத்தவன்; படித்த மேதை எழுத்தினில் இனிமை வைத்தார். எண்ணத்தை விருந்து வைத்தார் விழிப்பினில் வீரம் வைத்தார் வெற்றியில் வேகம் வைத்தார் உழைப்பினில் ஊக்கம் வைத்தார்; உலகுக்கே தம்மை வைத்தார் ! நிலாமுளை போலும் அந்தி நிழல்போலும் வளரும் நட்பை உலாவிடும் உலகில் காட்டி உயர்ந்தவர்; நெருப்புக் கோபம் இலாதவர்; ஊஞ்சல் நெஞ்சம் இலாதவர் பதவி ஆசை இலாதவர்; செத்தும் சாவே இலாதவர் சேக்கி ழார்போல் ! - திரு. வி. க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/224&oldid=926805" இலிருந்து மீள்விக்கப்பட்டது