பக்கம்:தேன்மழை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 230 நேற்றிருந்தார் இன்றிருப்பார் என்ப தென்ன நிச்சயமா? ஒன்றுமில்லை! தமிழ்ச்சங் கத்தில் வீற்றிருந்த கீரனெங்கே? சேர சோழ வேந்தரெங்கே? அலக்சாண்டர் இப்போ தெங்கே? "கூற்றுவனே வந்தாலும் அஞ்சேன்" என்று கூறியநம் அப்பரெங்கே? எல்லாம் மூச்சுக் காற்றிருக்கும் வரையில்தான்! நம்மெல் லோர்க்கும் கால்கழிந்த கட்டிலன்றோ கடைசிக் கட்டில்? மண்பெற்ற காவிரியின் நீரில் நீந்தி மாவீரன் ஆட்டனத்தி மறையக் கண்டு விண்பெற்ற முகில்மழைபோல் அழுதிட் டாளாம் வெல்லும்வேல் விழியுடையாள் ஆதி மந்தி கண்பெற்ற பெண்டிரலாம் அழுதா ரேனும் கண்ணகியே கண்ணிரால் கீர்த்தி பெற்றாள். பண்பற்றார் உள்ளத்தால் அழுவ தில்லை! பலர்கண்ணிர் வரலாற்றில் வாழ்வ தில்லை ! காதலிலே தோல்வியுற்றார் கண்ணிர் சொந்தக் காரணத்தின் வெளியீடே யாகும். நோயின் வேதனையால் அழுபவரின் துன்பம் விலகாதோ" எனக்கேள்வி கேட்கும் கண்ணிர் சோதனையே வந்தாலும் நாட்டுக் காகத் துன்பத்தை வரவேற்போன் வடிக்கும் கண்ணிர் மேதினியே பாராட்டும் கண்ணி ராகும்! - விளம்பரக்கண் ணிர்விரைவில் வற்றிப் போகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/233&oldid=926814" இலிருந்து மீள்விக்கப்பட்டது