பக்கம்:தேன்மழை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தோ கவிமணி (1876 - 1954) கற்றவனே! கவிமணியே குறிஞ்சிக் குன்றின் கருப்பொருளைப் போன்றவனே! திரண்ட தெங்கின் நெற்றிருந்து பயனென்ன இனிமேல் என்றே நினைத்தானோ எமனென்னும் கொடியோன் வாங்கி விற்றபொருள் பிறரிடம்போய்ச் சேர்த்தல் போன்று வெடுக்கென்றே அவனுலகம் போய்ச்சேர்ந் தாயே! சுற்றத்தார் கண்கலங்கத் தமிழ்நாட் டாரைத் - துயரத்தில் மூழ்கவிட்டு மறைந்திட் டாயே! மாலைநிலா அழுதிருக்கும்; நாட்டில் உள்ள மன்றங்கள் அழுதிருக்கும்; செய்தி கேட்டுச் சாலைமரம் அழுதிருக்கும் தெற்கே யுள்ள தமிழ்ச்சங்கம் அழுதிருக்கும்; உன்றன் செய்யுள் ஒலையெல்லாம் உனக்காக அழுதி ருக்கும்; உன்விட்டுச் செடிகொடிகள் அழுதி ருக்கும்! வேலியிட முடியாத மரணம் பெற்று விட்டவனே தீயுன்னைச் சுட்டி ருக்கும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/234&oldid=926815" இலிருந்து மீள்விக்கப்பட்டது