பக்கம்:தேன்மழை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் குரல் என்மொழி தமிழே அந்த எழில்மொழி அறிவின் ஆக்கம் என்மொழி தமிழே அந்த எழில்மொழி தேனின் தேக்கம் என்மொழி தமிழே அந்த எழில்மொழி எனக்குத் தாய்ப்பால் என்மொழி தமிழே அந்த எழில்மொழி புகழின் போர்வை! என்மனம் என்றன் எண்ணம் என்செயல் தமிழே என்பேன் என்குரல் என்றன் பாடல் என்சுவை அதுவே என்பேன் என்கதை என்றன் காதல் என்புகழ் அதனால் என்பேன் என்னுடல் என்றன் செல்வம் என்னுயிர் அதற்கே என்பேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/246&oldid=926827" இலிருந்து மீள்விக்கப்பட்டது