பக்கம்:தேன்மழை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தலைமை தாங்கும் தமிழ்



படுத்திருக்கும் வினாக்குறிபோல் மீசை வைத்த

பாண்டியர்கள் வளர்த்தமொழி, கடலின் நீரை

உடுத்திருக்கும் உலகத்தில் தலைமை தாங்கும்

உயர்ந்தமொழி; வெளிநாட்டார் மொழிக்குச் சொற்கள்

கொடுத்திருக்கும் வள்ளல்மொழி; வன்மை மென்மை

கொண்டமொழி : குமரிமொழி ; காப்பி யங்கள்

வடித்திருக்கும் ஆதிமொழி அறிவில் மூத்த

வள்ளுவனை ஈன்றமொழி தமிழே யாகும்.


தேன்பிறந்த பின்மலர்கள் பிறப்ப தில்லை

திசைபிறந்த பின்வானம் பிறப்ப தில்லை

மீன்பிறந்த பின்குளங்கள் பிறப்ப தில்லை

வேல்பிறந்த பின்இரும்பு பிறப்ப தில்லை

தேன்சுரக்கும் தமிழ்பிறக்கு முன்பே மற்ற

தேசத்தார் பேசுமொழி பிறக்க வில்லை

வான்பிறக்கும் முன்காற்றுப் பிறந்த துண்டோ?
வையத்தில் தமிழ்போலும் சிறந்த துண்டோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/247&oldid=1513329" இலிருந்து மீள்விக்கப்பட்டது