பக்கம்:தேன்மழை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சில் நிறுத்துங்கள் புத்தி என்பது நித்திரை வடமொழி அறிவென் பதுவே அமுதத் தமிழ்மொழி உத்தர வென்பதோ ஒட்டாதார் உதட்டொலி கட்டளை என்பதே கனிந்த தமிழொலி சித்திரம் என்பது தீப்பொறி வடமொழி ஒவியம் என்பதே ஒங்குபுகழ்த் தமிழ்மொழி நித்திரை-என்பது நெருப்பு வடமொழி உறக்கம் என்பதே உலவும் தமிழ்மொழி தருக்கம் என்பது தமிழன் றாதலின் ஆருயிர் அன்பனே அளவைநூல் என்றுசொல் வருக்கம் என்பது வடவர் வாய்ச்சொல் வகுப்பென் பதுவே மதுரத் தமிழ்ச் சொல் பருவதம் என்பது பைந்தமி ழன்று மலையென் பதுவே மாம்பழத் தமிழ்சொல் இரசம் என்றுநீ ஏனெழுத வேண்டும் சாறெனும் தேன்சொல் தமிழி லிருக்கையில்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/248&oldid=926829" இலிருந்து மீள்விக்கப்பட்டது