பக்கம்:தேன்மழை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய் நாடே அறம்பொருள் கண்ட நாடே ஆன்றோரை ஈன்ற நாடே மறைந்திடாப் பெருமை பெற்ற மணித்திரு நாடே! வண்ணக் குறிஞ்சியாய் முல்லை யாகிக் குளிர்கடல் நெய்த லாகிச் சிறந்துள என்தாய் நாடே! செந்தமிழ்த் தென்றல் நாடே ! ஊனாகி அந்த ஊனில் உயிரேறி வடிவம் பெற்று நானாகித் தமிழ னாகி நடமாடும் என்னைத் தாங்கும் தேனான நாடே! இன்பத் திருக்குறள் நாடே! நீல வானேந்தும் நாடே உன்றன் மடியன்றோ எனக்குத் தொட்டில்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/256&oldid=926837" இலிருந்து மீள்விக்கப்பட்டது