பக்கம்:தேன்மழை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சில் குழந்தையோ பெற்றோர் எச்சில் கூடையோ குறத்தி எச்சில் பழங்களோ பறவை எச்சில் பால்தயிர் இடைச்சி எச்சில் மழையெலாம் முகிலின் எச்சில் மதுவெலாம் வண்டின் எச்சில் எழில்மிகு புடைவை வேட்டி எல்லாமே நெய்வோன் எச்சில் ! குளத்துநீர் மீனின் எச்சில் குளிரிகழ் சத்து முத்தம் விளைத்திடும் போதில் எச்சில் விதையெலாம் நம்வாய் எச்சில் களைப்பலாப் பழமும் சோறும் சுவைத்திடும் பொழுதில் எச்சில் அளந்தநூல் நினைவின் எச்சில் அனைத்துமே எச்சில் எச்சில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/262&oldid=926843" இலிருந்து மீள்விக்கப்பட்டது