பக்கம்:தேன்மழை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலாடை விண்ணுக்கு மேலாடை வெயில்விழுங்கும் மேகம் வினைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம் மண்ணுக்கு மேலாடை மயில்.நீல இருட்டு மனத்திற்கு மேலாடை வளர்கின்ற நினைவு கண்ணுக்கு மேலாடை காக்கின்ற இமைகள் கனவுக்கு மேலாடை தேங்குகின்ற தூக்கம் எண்ணுக்கு மேலாடை எதுவென்றால் எழுத்தாம் எழுத்துக்கு மேலாடை எண்ணங்கள் ஒன்றே. நிலவுக்கு மேலாடை நகராத மலைகள் நீருக்கு மேலாடை படர்கின்ற பாசி மலருக்கு மேலாடை கிளிப்பச்சை இலைகள் மனைவிக்கு மேலாடை அவள்.கணவன் ஆவான் பலருக்கு மேலாடை கொதிக்கின்ற கோபம் பத்துக்கு மேலாடை பதினொன்றே யாகும் சிலருக்கு மேலாடை வற்றாத வீரம் திறமைக்கு மேலாடை சிறந்தபுகழ் ஒன்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/263&oldid=926844" இலிருந்து மீள்விக்கப்பட்டது