பக்கம்:தேன்மழை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 இணை மோனை வாய்க்காலின் தண்ணிரைத் தொட்டுத் துங்கும் வயல்தனிலே ஏருழவின் செய்தி யுண்டு. தாய்ப்பாலில் குடும்பத்தின் கதையும் நாட்டின் சரித்திரமும் சந்தித்துக் கொண்டி ருக்கும். போய்ப்பாயும் வரிப்புலியின் நகத்தில் வீரப் புரட்சியுண்டு தொகைதொகையாய்ப்பகைவர் தேரைச் சாய்த்தோனே! இவ்வுலகில் இன்றும் என்றும் சாயாத நின்புகழில் அனைத்தும் உண்டு. அடிவயிற்றில் செம்பொன்னைச் சுமந்து கொண்டும் அருவிதனைத் தலைமலையில் தொங்க விட்டும் முடிவெடுத்த உயரத்தை முடியாற் காட்டும் முதிர்ந்தமலை உடையவனே! வெற்றி யோடு வடபுலத்தில் வாழ்பவனே! செம்பு சேர்ந்த மதில்சூழ்ந்த மன்னவனே! பகைவர் நாட்டைக் கிடுகிடுக்க வைத்தவனே! பிறர்போல் நின்னைக் கேட்பதற்கு வரவில்லை கொடுக்க வந்தேன். மருந்தாலே நோய்தீரும், வானம் சிந்தும் மழையாலே வறண்டவயல் ஏக்கம் தீரும் விருந்தாலே பசிதீரும்; ஆனால் காதல் வெப்பத்தில் கொந்தளிக்கும் நோயோ, எந்த மருந்தாலும் தீர்வதில்லை. காதல் நோயை - மந்திரங்கள் தீர்ப்பதில்லை; மங்கை தீர்ப்பாள். அரசாங்கம் நடத்திவரும் இருங்கோ வேளே அறிந்தும்நீ இளமையைiண் ஆக்கல் நன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/51&oldid=926866" இலிருந்து மீள்விக்கப்பட்டது