பக்கம்:தேன்மழை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றுப் படை நேரசையில் நின்றடங்கும் பெயரே கொண்டோன் நிறங்கொண்ட தாமரையின் நிறமே கொண்டோன் ஊரினையும் உலகினையும் தாண்டி, விண்ணின் உச்சியைப்போய்த் தீண்டுகின்ற கீர்த்தி கொண்டோன் ஆரமுதம் போற்சிறந்தோன் அறிதல் முத்தோன் ஆய்ந்தாய்ந்து சீர்தூக்கி முடிவு காணும் காரணமே ஆய்என்னும் பெயரைத் தாங்கக் காரணமாம்! இன்னுங்கேள் விறலிப் ೧uಿಕTGಣ! சீர்கொண்டு தளைகண்டு செறிந்த சந்தச் சிறப்பமைந்த அடிகளிட்டுத் தொடையைத் துக்கிப் பேர்கொண்ட புதுப்பாடல் பாட வல்ல பெரும்புலவர் வறுமைக்கு மருந்து போன்றோன். கார்நின்று மிகப்பெரிய பஞ்சம் வந்த காலத்தும், தருங்கையைத் தளர்த்தி டாது நேர்நின்று தாயைப்போல் கருணை காட்டும் நீர்நாடன்! நிதிபதியாய் விளங்கும் வள்ளல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/55&oldid=926870" இலிருந்து மீள்விக்கப்பட்டது