பக்கம்:தேன்மழை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 54 கன்னலென இனிப்பவளே! சங்க நூலின் கற்பனைபோற் சிறந்தவளே! அந்த மன்னன் தென்பொதிகை மலைச்சாரல் மன்னன்; போரில் செயங்கண்டு பயன்கொண்ட சேனை மன்னன் அன்புடைய மனைவிக்கே ஆசை மன்னன் அம்மன்னன் நமக்கெல்லாம் மீசை மன்னன் பொன்னைநிகர் புலவரெலாம் போற்றும் மன்னன் புகழ்புரிந்தே வாழ்நாளை வளர்க்கும் மன்னன். மலைதடவும் தோளுடையோன், கார்கா லத்து மழைதடவும் கரமுடையோன்; ஒய்வே யின்றிக் கொலைதடவும் வர்ளேந்தி எதிர்த்த 'கொங்கர்’ கூட்டத்தை வீழ்த்திடவே, சிறந்த கூர்வேல் இலைதடவி, மீசையைமே லேற்றிப் பார்வை இரண்டினையும் தனிக்கனலாய் மாற்றி, மாற்றார் தலைதடவி மிதிக்கின்ற யானை ஏறித் தாராடப் போராடி வெற்றி பெற்றோன். முடியேந்தும் செம்மணிபோற் சிறந்த வள்ளல் முன்நின்றேன்; 'யாரென்றான்', 'விறலி என்றேன் நடையேந்தி வந்தவளே! நாளை இங்கே நடக்கட்டும் நின்நடனம் என்றான் ஆய்வேள். கொடியேந்தும் நகரினிலே, நீல வானம் குளிரேந்தும் இரவினிலே, மின்னும் தங்கப் படியேந்தும் மண்டபத்தில் ஆட லானேன். பார்வையினால் கோணங்கள் போட லானேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/56&oldid=926871" இலிருந்து மீள்விக்கப்பட்டது