பக்கம்:தேன்மழை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ஆற்றுப் படை மண்டபத்தில் மயிலானேன் ஆட்டத் தாலே மாமன்னன் தலையசைத்தான் மகிழ்ச்சி யாலே பண்பழுத்த புலவரெலாம் மயங்க லானார் பார்வையொளி அவர்மீது படிந்த தாலே! அண்டையில்வீற் றிருந்தபலர் 'அடடா என்றார், அச்சமற்ற வீரரெலாம் மெச்சி நின்றார். வண்டணைந்த குழல்மாதர் வியந்து நோக்கி வையகத்தில் வழக்கிழந்த மொழிபோ லானார். படித்துள்ளங் குளிர்பவனும், படியார் தம்மைப் படிப்பித்தே மகிழ்பவனும், பழிச்சொல் கேட்டுத் துடித்துள்ளங் கொதிப்பவனும், எளியோர் கண்ணிர் துடைத்துள்ளம் நெகிழ்பவனும், வருவோர்க்கெல்லாம் கொடுத்துக்கை சிவப்பவனும், தமிழென் ஆவி குறித்துக்கொள் என்பவனும் ஆன ஆய்வேள் எடுத்துக்கொள் எடுத்துக்கொள், மின்னும் @UTr667 ஏற்றுக்கொள் ஏந்திக்கொள்' என்றே ஈந்தான். நன்றாகச் சூல்கொண்ட ಅpಥಿನಿ கூட்டம் நாற்புறமும் வெண்ணிலவைச் சூழ்ந்தாற் போலே குன்றாத கருமைநிறக் குழலின் மீது குளிர்முல்லை சூடிக்கொண் டிருக்கும் பெண்னே! தென்பாண்டி முத்தேபோற் சிறந்தோன் நாட்டில் தெள்ளியநீ ரோடையெலாம் பாடல் பாடும் (மன்றோரம் நின்றுள்ள பலாம ரங்கள் - மத்தளத்தை ஒத்தபல கனிகள் காட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/57&oldid=926872" இலிருந்து மீள்விக்கப்பட்டது