பக்கம்:தேன்மழை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணன் சாதித்தான் நாவீற்றி ருந்த்தமிழ்ப் புலவ ரோடு நற்கவிஞன் திருத்தக்க தேவன் என்பான் பூவீற்றி ருப்பதுபோல் வீற்றி ருந்தான். பொருந்திலிளங் கீரனென்பான் அவனை நோக்கி; "மாவீற்றி ருக்கின்ற தோப்பில், வண்ண வரிக்குயில்கள் வீற்றிருக்கும், அறங்கொல் லாத கோவீற்றி ருக்கின்ற நாட்டில், செங்கோல் குனியா" தென் றான்; தேவன் ஆம்ஆம்' என்றான். ஆய்ந்துணர்வோர் நெஞ்சமெல்லாம் கல்வி யாலே அன்றாடம் சிவக்குமென்றான் அவியன் என்பான். "மாந்தரெலாம் உணவினிலே இன்பம் காண்பார்: மாகவிஞன் இன்பத்தில் உணவு காண்பான்; தீந்தமிழ்போல் பிறமொழிகள் இனிப்ப தில்லை! திருத்தங்கள் இல்லாத நாடே இல்லை. ஏந்துபுகழ்ப் பாவலரே! என்றான் தேவன். இடையாற்று மங்கலத்தன் ஆம்ஆம்' என்றான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/59&oldid=926874" இலிருந்து மீள்விக்கப்பட்டது